What is Password

What is Password

techietalks

Mon Aug 09 2021
What is Password
Advertisnment

கடவுச்சொல்என்னும் திறவுகோல்

விரிவாக்கம்: பர்சனல்

அக்சஸ்செக்யூரிட்டிசர்விஸ்விதோட்ரெகுலர்டீசலோசேர் (Personal Access Security Service Without Regular Decloser)

கடவுச்சொல்என்றால் என்ன?

கடவுச்சொல்(Password) அல்லது கடவுக்குறியீடு(Passcode) என்பது ஓர் இரகசிய எழுத்து சரம்(string of characters) . இஃது ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவாய் செயல்படும் நபர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசிய வார்த்தை.இது பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட பயனர்களை வேறுபடுத்த உபயோகப்படுத்துவர்.

கடவுச்சொற்கள் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது, அவை இரகசிய வார்த்தைகள் என்று அறியப்பட்டன. கடவுச்சொற்கள் பல வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல நிஜ உலகில் பயன்படுத்தப்படாவிட்டாலும், நவீன உலகில் இன்றியமையாத ஒரு இடம் இருக்கிறது. இணையத்தின் மெய்நிகர் உலகில், கடவுச்சொற்கள் உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கின்றன.மேலும் பாதுகாப்பான தகவல் மற்றும் வலைத்தளங்களுக்கான அணுகலை நிர்வகிக்கின்றன.

கடவுச்சொல்லின் நோக்கம்

கடவுச்சொல்லின் தலையாய நோக்கம்அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எதிரான பாதுகாப்பு (Defense against unauthorized access) . இதனால் சேமிக்கப்பட்ட தரவுகளை (stored data) பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

கடவுச்சொற்களுக்கான மாற்று முறைகள்

இன்றைய நவீன உலகில்கடவுச்சொற்கள் மட்டுமல்லாமல்வேறுபுதிய மாற்றுமுறைகளும் தரவுகளின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தபயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தஒரு அடிப்படை குறியீடாக கடவுச்சொல்உள்ளது.

கடவுச்சொற்களின் சிக்கல்கள் மற்றும் பாதிப்புகளை அகற்ற உதவும் கடவுச்சொல் இல்லாத அங்கீகரிக்கப்படும்முறைகளும்தற்போதுபயன்படுத்தப்பட்டுவருகிறது. திறன்பேசி சாதனங்கள் அல்லது சமூக தளங்களில் உள்ள பயனர்களுக்கு இந்த முறை குறிப்பாக நன்மை பயக்கும். தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்குவதற்குப் பதிலாக, பயனர்கள் ஒரு உரைச் செய்தி, மின்னஞ்சல் அல்லது பிற செய்தி எச்சரிக்கை அல்லது சேவை மூலம் ஒரு முறை அங்கீகாரக் குறியீட்டைப் பெறுகின்றனர். இந்த வகை முறைகளில் முதல் படி கடவுச்சொலாகவே இருக்கும்.

பிற அங்கீகார முறைகள் கடவுச்சொற்களுடன் அல்லது அதற்கு பதிலாக இணைக்கப்படலாம். அவை பின்வருமாறு,

  • இரண்டு காரணி அங்கீகாரம் 2FA(Two-factor authentication (2FA))- கடவுச்சொல், PIN, அடையாள அட்டை, பாதுகாப்பு டோக்கன், ஸ்மார்ட்போன், கைரேகைபோன்றவைகளின்சேர்க்கைகளில்இயங்கும்
  • ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP)- இது ஒரு பரிவர்த்தனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே பயனரை அங்கீகரிக்கிறது. இந்த கடவுச்சொற்கள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் மாறும் மற்றும் பொதுவாக பாதுகாப்பு டோக்கன்களில் சேமிக்கப்படும்
  • பாதுகாப்பு டோக்கன்கள்(Security Tokens)- செக்யூரிட்டி டோக்கன் என்பது ஒரு ஸ்மார்ட் கார்டு அல்லது கீ ஃபோப் போன்ற ஒரு வன்பொருள் சாதனமாகும், இது ஒரு பயனர் பிணையத்திற்கான அணுகலை அங்கீகரிக்கச் செய்கிறது.
  • சமூகஉடங்களில் உள்நுழைவது- இந்த வகை உள்நுழைவு பயனர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் தனி உள்நுழைவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக Facebook அல்லது Google போன்ற சமூக ஊடகக் கணக்குடன் இணைப்பதன் மூலம் பயன்பாடுகள் அல்லது வலைத்தளங்களில் தங்களை அங்கீகரிக்க உதவுகிறது.
  • மல்டிஃபாக்டர் அங்கீகாரம்(Multi Factor Authentication -MFA)- இது 2FA போன்றது ஆனால் இரண்டு காரணிகளுக்கு பதிலாக பலகாரணிகளைபயன்படுத்திபயனர்களைஅங்கீகரிக்க உதவுகிறது.
  • பயோமெட்ரிக்(Biometrics) -பயோமெட்ரிக் முறைகள் கைரேகைகள் அல்லது விழித்திரை ஸ்கேன் அல்லது தட்டச்சு முறைகள் மற்றும் குரல் அங்கீகாரம் போன்ற உடலியல் பண்புகள் அடிப்படையில் பயனர்களை அங்கீகரிக்கிறது.


Advertisnment