India introduces e-RUPI payments

India introduces e-RUPI payments

techietalks

Fri Aug 06 2021
India introduces e-RUPI payments
Advertisnment

e-RUPI டிஜிட்டல் கட்டண முறை


e-RUPI டிஜிட்டல் கட்டணத் தீர்வு

e-RUPI டிஜிட்டல் கட்டணத் தீர்வு இந்தியாவில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. ஒரு e-RUPI என்பது மின்னணு வவுச்சர் ஆகும், இது டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்கிறது. கடந்த அன்று திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் கட்டண தீர்வை ஊக்குவிக்கும் மின்னணு வவுச்சரை இ-ரூபிஐ அறிமுகப்படுத்தினார்.

பிரதம மந்திரி அலுவலகத்தின் அறிக்கையின் படி, e-RUPI என்பது பணமில்லா மற்றும் தொடர்பற்ற கட்டணக் கருவியாகும்.

பிரதம மந்திரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் "இது க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான இ-வவுச்சர் ஆகும், இந்த குறியீடுகள் பயனாளிகளின் மொபைலுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடையற்ற ஒரு முறை பணம் செலுத்தும் பொறிமுறையைப் பயன்படுத்துபவர்கள் அட்டை இல்லாமல் டிஜிட்டல் கட்டணப் பயன்பாடு அல்லது வவுச்சரை சேவை வழங்குநரிடம் இணைய வங்கி அணுகி மீட்டெடுக்க முடியும்” கூறப்பட்டுள்ளது.



e-RUPI என்றால் என்ன?

e-RUPI ஆனது பணத்தை நேரடியாக பயன்படுத்தாமல் பயனாளிகளுடன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது செயல்பாடுகளுக்காக நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்தால் SMS அல்லது QR குறியீடு மூலம் பகிரப்படும்.

இந்த வவுச்சர் மூலம் முழு பரிவர்த்தனை செயல்முறையும் ஒப்பீட்டளவில் வேகமானது மற்றும் அதே நேரத்தில் நம்பகமானது, ஏனெனில் தற்போது உள்ள நடைமுறைப்படி பணத்தை நேரடியாக டெபாசிட் செய்யாமல் தேவையான தொகை ஏற்கனவே வவுச்சரில் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வவுச்சர்கள் பணத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு மாற்றுமுறையேயன்றி இது கிரிப்டோகரன்சி (cryptocurrecny) அல்ல



e-RUPI சேவையின் பயன்கள்

• இது முற்றிலும் தொடர்பற்ற முறை, பயனாளிகள் வவுச்சரின் பிரிண்ட் அவுட்டை எடுத்துச் செல்லத்தேவையில்லை. மேலும் இந்த முறை பரிவர்தனைகளில் பயனாளிகள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை, எனவே தனியுரிமை பராமரிக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது.
• டிஜிட்டல் அல்லது வங்கி இருப்பு தேவையில்லை - வவுச்சரை மீட்கும் நுகர்வோருக்கு டிஜிட்டல் கட்டண ஆப் அல்லது வங்கி கணக்கு தேவையில்லை
• வவுச்சர் மீட்பை வழங்குபவரால் கண்காணிக்க முடியும்

e-RUPI சேவை எங்கு பயன்படுத்தப்படுகிறது

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அணைத்து வகையான திட்டங்களின் மூலம் பயன் பெரும் பயனர்களுக்கு இந்த வவுச்சர் முறையை பயன்படுத்தி திட்டங்களின் பலனை வழங்கலாம்.

தற்போது e-RUPI சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள்


Advertisnment